Home TVK கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்த வேண்டும் – தேமுதிக

கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்த வேண்டும் – தேமுதிக

23
0
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து
அரசியல் தலையீடின்றி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டி அறிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் மீது மாவட்ட ஆட்சியரே காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒரு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. இக்குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, நேர்மையான, வெளிப்படையான விசாரணையை நடத்தி, குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன? என்பது குறித்து மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். சிங்கப்பெண் படை அமைத்தும் கூட புரயோஜனம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுவிடும். பெண்களை மதிக்கின்ற அரசு என்று கூறும் முதலமைச்சர், பெண் மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பெண்கள், ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாம போயிடும். அதேபோல் தாய்மாமன், அண்ணன் என்று சொல்லும் முதல்வர், ஒட்டுமொத்த பெண்களுக்கு நம்பிக்கை தரவேண்டும் என்றால், மாவட்ட ஆட்சியர் காவல் நிலையத்தில் புகார் செய்த பிறகும் அமைதி காக்காமல், முறையாக விசாரணை செய்யவேண்டும். எனவே கள்ளக்குறிச்சி MLA-வை உடனடியாக பதவி நீக்கம் செய்யணும். பெண்களின் பாதுகாப்பையும், அரசு அதிகாரிகளின் கண்ணியத்தையும் உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், பெண்களின் பாதுகாப்பு மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே, தமிழக முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய வேண்டும் எனத் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here