Home தற்போதைய செய்தி நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: ‘ஒற்றுமையாக இருக்கிறோம்’ – காங்கிரஸ்

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம்; திமுக பங்கேற்கவில்லை: ‘ஒற்றுமையாக இருக்கிறோம்’ – காங்கிரஸ்

13
0

நாளை டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடக்க உள்ளது.

இந்தக் கூட்டத்தில் திமுக கலந்துகொள்ளாது. ஆனால், கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலன்களைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு திமுக என்றென்றும் குரல் கொடுக்கும் என்று திமுக அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை நடக்க உள்ள கூட்டம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸின் தகவல் தொடர்புப் பொறுப்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்…

“நாளை, ஜூன் 8, 2026 திங்கட்கிழமை மதியம் 12 மணிக்கு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் (Constitution Club) நடைபெறவிருக்கும் ‘இண்டியா ஜன்பந்தன்’ (INDIA janbandhan) கூட்டத்தில் பங்கேற்பதை 23 அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஒரு சில கட்சிகள் தங்களின் சொந்தக் காரணங்களால் இந்தக் குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளனர் – இருப்பினும், மோடி அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தங்களது கடுமையான எதிர்ப்பை அவர்களும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here