June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தண்ணீரில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி சாவு

தென்காசி  மாவட்டம் கீழப்பாவூர் வணிகர் மேலத் தெருவில் வசித்து வந்தவர் புதியவன் (52.) கூலித்தொழிலாளி அவர் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கியிருந்து கூலி வேலை செய்து ஊருக்கு வருவது வழக்கம். இதேபோல் கடந்த 26ஆம் தேதி இவர் வீட்டிலிருந்து சென்றுள்ளார். பின்னர் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் வெளியூரில் வேலைக்கு சென்று உள்ளார் என்று நினைத்திருந்தனர். இந்த நிலையில் கீழப்பாவூரில் உள்ள ஊருண்ணியில் ஆண் பிணம் ஒன்று தண்ணீரில் மிதப்பது தெரிய வந்துள்ளது. இதே குறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த பொழுது அது புதியவன் உடல் என்பது தெரியவந்துள்ளது. இரவில் ஒதுங்கச் சென்ற போது தவறி தண்ணீரில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாவூர் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதியவன் உடலை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

About Author

error: Content is protected !!