February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

இயக்குனர் விசுவிற்கு சரத்குமார் அஞ்சலி

விசு ஒரு யதார்த்தவாதி. தன் படங்களில் அவரது சமூக சிந்தனைகள் பரந்திருக்கும். சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கு தன் குரலை தவறாமல் பதிவு செய்தவர். கடைசியாக குடியுரிமை திருத்த சட்டம் முதல் கதை திருட்டு வரை தன் கருத்தை பேசி வீடியோவாக வெளியிட்டவர்.

அவர் இருந்திருந்தால் வாசலுக்கு வந்து கரகோஷம் எழுப்பி கொரோனாவுக்கும் தனிமைப்படுத்தலை அழுத்திச் சொல்லியிருப்பார்.

அவருக்கு நாம் எப்படி அஞ்சலி செலுத்தப் போகிறோம்? என்னுள் எழுந்த யோசனையை விசுவோடு பழகிய தருணங்களை அசைபோட்டு எழுதுகிறேன் இது என் முடிவல்ல, யோசனைதான்.

திரைத்துறையினர் விசுவுக்கு அஞ்சலி செலுத்த கூடப்போகிறோமா? நம்மைப் பார்க்க வரும் கூட்டத்துக்கும் மத்திய மாநில அரசுகளின் அறிவுறுத்தலையும் மீறி வழி விடப் போகிறோமா?

துக்கத்தை வெளிப்படுத்த கருப்பு உடையணிந்து விசுவின் நினைவுகளை பேசி வீடியோவாக வெளியிடலாம். அவரது இறுதி ஊர்வலம் துவங்கும் போது மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தலாம். விசு இருந்து இப்படி ஒரு சூழல் யாருக்கு நேர்ந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்.

தனிமையை தொடர்வோம். அதன் வழி விசுவுக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவரவர் வீட்டு வாசலில் கருப்பு உடையுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவோம்.

About Author

error: Content is protected !!