February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கர்நாடகா மாநில அதிமுக செயலர் பேட்டி

டி. டி. வி. தினகரன் பசுந்தோல் போர்த்திய நரி -புகழேந்தி பேட்டி

கர்நாடகா மாநில அதிமுக செயலர் புகழேந்திபேட்டி

பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் டிடிவி தினகரன் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடுவார் எனவும் எனவே அவரை நம்பி இனி கட்சியில் யாரும் இருக்க வேண்டாம் எனவும் இளைஞர்கள் அவர் கட்சியில் இருப்பதை யோசிக்கவேண்டும் மேலும் அவர் பசுந்தோல் போர்த்திய நரி என தென்காசியில் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேட்டி

தென்காசியில் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தலைமையிலும் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி முன்னிலையிலும் 50க்கும் மேற்பட்ட டிடிவி தினகரன் அணி முக்கிய பொறுப்பாளர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் செய்தியாளரை சந்தித்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி டிடிவி தினகரன் அவர்களுக்கு பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல ரெடியாக இருப்பதாகவும் தமிழகத்தில் அவர் அரசியல் நடத்த மாட்டார் எனவும் எனவே அந்தக் கட்சியை நம்பி ஒரு சில இளைஞர்கள் இருக்கிறார்கள் எனவும் அவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் அவர் ஒரு பசுந்தோல் போர்த்திய நரி எனவும் 200 ரூபாய் கொடுத்து ஒரு சில கூட்டங்கள் நடத்தி சசிகலா அவர்களை ஏமாற்றி வருவதாகவும் ஜெயா டிவியை பொறுத்தவரை முழுக்க முழுக்க அதை டிடிவி தினகரன் துதிபாடும் தொலைக்காட்சி ஆகவும் நமது எம்ஜிஆரையும் அவர் துதி பாடும் நிகழ்ச்சிகள் தொடருமேயானால் அந்த தொலைக்காட்சியும் நாளிதழும் முடங்கிவிடும் அபாயம் ஏற்படும் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்

About Author

error: Content is protected !!