March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அரசு இ சேவை மையம் மூலமாக பெறப்பட்டு
தமிழ்நிலம் மென்பொருள் வாயிலாக மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல்செய்யப்பட்டு வருகிறது. புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தமிழ் நிலம்
மென்பொருளில் தென்காசி மாவட்டத்தின் பெயரை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளவேண்டியதுள்ளது. இப்பணியின் போது அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களிலுள்ள நில
அளவை புல எண்கள், பட்டாதாரர் விபரங்களை தமிழ் நிலம் கணிணி சார்வருக்குபுதிய தென்காசி மாவட்ட குறியீட்டுடன் வட்டாட்சியாரின் மின்னணு கையொப்பத்துடன்மாற்றப்பட வேண்டியுள்ளது. இந்த மேம்படுத்தும் பணிக்காலத்தில் தமிழ் நிலம் மென்பொருளைதற்காலிகமாக 15 தினங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும் என திருநெல்வேலி
தேசிய தகவலியல் மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி நடைபெறும்போது பட்டாமாறுதல்கள் தமிழ்நிலம் மென்பொருளில் செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி பணி பாரிட்சார்த் முறையில் கடையநல்லூர் வட்டத்தில் முன்னோடியாக 24.12.2019
அன்று தொடங்கப்படவுள்ளது. பின் அனைத்து வட்டங்களிலும் இப்பணி படிப்படியாகமேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் 24.12.2019லிருந்து 15 தினங்களுக்கு கடையநல்லூர்
வட்டத்தில் பட்டா மாறுதல்கள் செயல்படுத்தப்பட இயலாத சூழ்நிலை உள்ளது. ஆனால் இந்தகாலகட்டத்தில் ஏற்கனவே இ-சேவை மையம் மூலம் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
பாதிப்படையாது அவை நிலுவையில் வைக்கப்பட்டு புதிய மாவட்டத்தின் பெயர் மாற்றம்செயல்படுத்தப்பட்ட பின்னர் அந்த விண்ணப்பங்கள் உரிய பாரிசீலனை செய்யப்பட்டு பட்டா
மாறுதல்கள் செய்யப்படும். இடைப்பட்ட காலத்தில் (அதாவது 24.12.19 முதல் மாறுதல்கள்முழுமையடையும் காலம் வரை) புதிய பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அளிக்க இயலாது.
ஆனால் பட்டா மாறுதல்களைத் தவிர்த்து இதர இ-சேவைகள் அதாவது சாதிச்சான்றிதழ்உட்பட பிற சேவைகள் தொடா;ந்து தடையின்றி வழங்கப்படும். கடையநல்லூர்வட்ட மக்கள்
இந்த பணிக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடார்பு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!