April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி பாராளுமன்ற இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 7 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 15 பேர் போட்டி-இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவர்களின் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 26 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்புமனுக்களில் உள்ள 4 பேர் தான் போட்டியிடவில்லை என மனுவை வாபஸ் பெற்ற நிலையில், 22 வேட்பு மனுக்கள் மீதமிருந்த நிலையில், ஒரு சிலரின் இரண்டு வேட்புமனுக்களை கழித்தது போக தற்போது இறுதி வேட்பாளர்களாக 15 பேர் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளனர்.

அதில் 8 பேர் அரசியல் கட்சி சார்பாகவும், 7 பேர் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

error: Content is protected !!