February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உதயமானது தென்காசி மாவட்டம் முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார்

உதயமானது தென்காசி மாவட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்துணை முதல்வர் அமைச்சர் பங்கேற்பு
புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தினை முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விழாவில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
நெல்லை மாவட்டத்தினை இரண்டாகப் பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார் இதனையடுத்து தென்காசி புதிய மாவட்டம் அமைப்பதற்கான பணிகள் துவங்கின. தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், வீரகேரளம்புதூர், கடையநல்லுர், சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகா பகுதிகளை கொண்டதாக தென்காசி மாவட்டம் அமைக்கப்பட்டது. சங்கரன்கோவிலில் புதிதாக கோட்டாட்சித்தலைவர்அலுவலகம் அமைக்க அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் தென்காசி புதிய மாவட்ட துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார் . முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுடபவியல் துறை அமைச்சர் உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமைச் செயலாளர் சண்முகம் வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா திட்ட விளக்க உரையாற்றினார்.
விழாவில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி, தங்கமணி, சண்முகம், அன்பழகன், சரோஜா, சம்பத், கருப்பணன், மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ், விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், வீரமணி, ராஜேந்திரபாலாஜி, மென்ஜமின், நீலோபர் கபில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பாண்டியராஜன், பாஸ்கரன், வளர்மதி, ராமச்சந்திரன், அரசு முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் தளவாய் சுந்தரம், மேலவை எம்.பி.,கள் விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன்,முன்னாள் எம்பியும் புறநகர் மாவட்ட செயலாளருமான பிரபாகரன், மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா எம்.எல்.ஏ.,கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முருகையா பாண்டியன், இன்பதுரை, மனோகரன், நாராயணன், முகமது அபுபக்கர் , மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமார் பாண்டியன் மற்றும் பலர்கலந்து கொண்டனர் . முடிவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் நன்றி கூறினார்.

About Author

error: Content is protected !!