June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி – குளத்தில் மூழ்கி விவசாயி பலி

தென்காசி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு கீழப்புலியூர் பெரியகுளம் அருகே நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று மாலை வீட்டில் தகவல் தெரிவித்துவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் தென்காசி காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் இரவு முழுவதும் விவசாயி கருப்பசாமியை தேடினர். மீண்டும் இன்று காலை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் குளம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மடையில் இடுக்கியில் மாட்டிக்கொண்ட கருப்பசாமியின் உடலை மீட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

About Author

You may have missed

error: Content is protected !!