March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ஆணைக்கிணங்க மத்தியில் ஆளும் பாஜக அரசு மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 149 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. அது போல் மானியத்துடன் வழங்கப்படுகிற சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும் 153 ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றம் சாமான்ய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையாக பாதித்துள்ளது..
எனவே மத்திய பிஜேபி அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து இன்று ( 18-02-2020 செவ்வாய் கிழமை) அன்று மாலை 4.00 மணி அளவில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனிநாடார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் ,AICC ,PCC உறுப்பினர்கள் ,மாவட்ட ,நகர ,வட்டார , பேரூர்,கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் துணை அமைப்பு தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!