June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தென்காசி மாவட்டம் துவங்கப்பட்டதையடுத்து, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சுப்பராஜா திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தின் முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் என்பதால் காலை முதலே ஒருவித பரபரப்பு தொற்றிகொண்டது
காலை11 மணிக்குதான் மனுக்கள் வாங்கப்படும் என்கிற அறிவிப்பு இருந்தும் 8 மணிக்கே பொதுமக்கள் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பாலம் அருகே வரத் துவங்கினர் , அப்போதே காவலர்கள் மனு கொடுக்க வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மண்டபம் அருகே பேரிகார்டுகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தி இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாதபடி செய்தனர்
11 மணிக்கு குறைதீர்க்கும் கூட்டம் துவங்கியது , கோரிக்கை மனுக்களை பெற்று பதிவு செய்து , ஒப்புகை சீட்டு வழங்க 10 க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டு இருந்தனர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் , உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் பழனிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். குறைதீர்க்கும் கூட்டம் நடந்த மண்டபம் முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. மண்டபத்துக்கு வெளியிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் மனு அளித்தனர்.
தென்காசியில் மாவட்டத்தில் நடைபெற்ற முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 பயனாளிகளுக்கு ரூ.2.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். 10 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார். ஒரே நாளில் 1100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன .

About Author

error: Content is protected !!