February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழகத்தின் கிரீடமாக தென்காசி மாவட்டம் விளங்க வேண்டும் துணை முதல்வர் புகழாரம்

தமிழகத்தின் கிரீடமாக தென்காசி மாவட்டம் திகழ வேண்டும் என தென்காசி புதிய மாவட்ட துவக்க விழாவில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்
தென்காசியில் நடைபெற்ற தென்காசி புதிய மாவட்ட துவக்க விழாவிற்கு தலைமை தாங்கியதுணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியதாவது:
தென்காசி மாவட்டத்தில் அனைத்து வளங்களும் உள்ளன. தமிழகத்தின் கிரீடமாக தென்காசி மாவட்டம் திகழ வேண்டும். அம்மா கூறியதை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு உள்ளது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது 5 புதிய மாவட்டங்களை உருவாக்கினார், அம்மா முதல்வராக இருந்த போது 7 மாவட்டங்களை உருவாக்கினார். இப்போது அம்மாவின் அரசு 5 மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. இவற்றில் முதல் மாவட்டமாக தென்காசி மாவட்டம் இன்று உதயமாகியுள்ளது.
இயற்கை தாயின் செல்லப்பிள்ளையாக தென்காசி மாவட்டம் உள்ளது. குற்றால குறவஞ்சியில் இயற்கை வளம் பற்றி கூறப்படுகிறது. மூலிகை கலந்த தண்ணீர் குற்றாலத்தில் அருவியாக கொட்டுகிறது. காசிவிசுவநாதருக்கு தென்காசியில் ஆலயம் உள்ளது. பல்வேறு வசதிகள் உள்ள இம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது என்றார்

About Author

error: Content is protected !!