February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழா திரளாக கலந்து கொள்ள சரத்குமார் வேண்டுகோள்


பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க மணிமண்டப திறப்பு விழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின்
நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வாழ்த்து

தமிழக மக்களின் அன்றாட நாட்கள் துவக்கத்துடன் பின்னிப்பிணைந்த தினத்தந்தி நாளிதழை புதிய பரிமாணத்தில் பல்வேறு நகரங்களுக்கு விநியோகிக்கும் அளவிற்கு உயர்த்திய தினத்தந்தி நாளிதழின் முன்னாள் நிறுவனரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பத்திரிகை, விளையாட்டு, கல்வி, தொழில் முதலான பல்வேறு துறைகளில் எண்ணற்ற சாதனை புரிந்தவருமான பத்மஸ்ரீ டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் வரலாற்று சிறப்புமிக்க மணிமண்டப திறப்பு விழா நாளை மறுநாள் 22.02.2020 நடைபெறவிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

சின்ன ஐயா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் எனது அண்ணன் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள், தினத்தந்தி பத்திரிக்கை வளர்ச்சிக்காகவும், இளைஞர்கள் ஊக்குவிப்பிலும், மாணவர்களின் கல்விக்காகவும், கோவில் திருப்பணிகளுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர். இரண்டு முறை சென்னை மாநகர ஷெரிப்பாகவும் செயலாற்றியவர். தந்தையின் உழைப்பால் உருவான தினத்தந்தியின் பொறுப்பை, 1959 ல் கையிலெடுத்தவர் தனது புத்தி கூர்மையால் எல்லைகள் தாண்டி தினத்தந்தியை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதருக்கு, அவரது உண்மையான, நேர்மையான, திறமையான உழைப்பினை தலைமுறை கடந்து எடுத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டணம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு அளித்திருக்கும் இந்த மாபெரும் அங்கீகாரத்தினை மனதார பாராட்டி வரவேற்கிறேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்களின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டப திறப்பு விழாவில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சின்ன அய்யாவின் புகழுக்கு சிறப்பு சேர்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன். என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

About Author

error: Content is protected !!