May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

சிவகாசி சிறுமி கொலை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க சமக தலைவர் சரத்குமார் வலியுறுத்தல்

சிவகாசி சிறுமி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு
தூக்கு தண்டனை வழங்க வேண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகள் இயற்கை உபாதை கழிக்கச் சென்று வீடு திரும்பாத நிலையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மறுநாள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயர சம்பவத்தை அனைவரும் அறிவோம்.
சிறுமி  கொலை வழக்கில் காவல்துறையினர், அசாம் மாநிலத்தைச் சார்ந்த மஜம் அலி என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தாலும், விரைந்து புலனாய்வு செய்து, குற்றவாளியின் குற்றத்தினை உறுதிபடுத்தி தூக்கு தண்டனை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை உடனடியாக நிறைவேற்றினால் தான் குற்றங்களை குறைக்க இயலும். 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகளாக உறுதிசெய்யப்பட்ட முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு, கருணை மனு அனைத்தும் நிராகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வளித்தாலும், உயிருடன் வாழ தகுதியற்ற கொலை குற்றவாளிகள் 7 ஆண்டுகள் கடந்தும் தண்டனை பெறாமல் காலதாமதமாவது வருத்தமளிக்கிறது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகள் தற்போதைய அரசியலமைப்பு விதிகள், சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி தப்பிச் செல்வதற்கு வழிவகுப்பதால், சட்டத்திருத்தம் செய்து உடனடியாக குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

About Author

error: Content is protected !!