February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் இன்று (9.2.2020) சேலம் மாவட்டம், தலைவாசலில், சர்வதேச தரத்தில் அமைக்கப்படவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சேலம் மாவட்டத்தில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, விழாப் பேருரையாற்றினார்கள்.

தலைவாசலில் அமையவுள்ள கால்நடைப் பூங்கா சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் தலைவாசலில் நடைபெற்ற கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய துணை முதலமைச்சர், கடந்த ஆண்டுகளில், 4 ஆயிரத்து 554 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கால்நடைத்துறையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் 87 ஆயிரத்து 744 மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டதாகவும், அவை இனவிருத்தி அடைந்ததன் மூலம், 1 லட்சத்து 76 ஆயிரத்து 153 கன்றுகளை ஈன்றுள்ளதாகவும், இதனால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.

மேலும், 40 லட்சத்து 88 ஆயிரம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கப்பட்டதில், அவை 3 கோடி ஆடுகளாக இனப்பெருக்க விருத்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்

உடன், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை K. ராதாகிருஷ்ணன், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.அ. ராமன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

About Author

error: Content is protected !!