May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சங்கரன்கோவில் கோவிலில் செய்தியாளருடன் வாக்குவாதம்

செய்தியாளர்களுக்கு கோவிலில் அனுமதி மறுப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோவிலுக்கு என்று பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை செய்திக்காக படமெடுக்க செய்தியாளர்கள் கோயிலுக்குள் சென்ற கேமராவை எடுத்தபோது கோவில் நிர்வாகத்தினர், செய்தியாளர்களை கோவிலுக்குள் படமெடுக்க இந்து அறநிலைத்துறை அனுமதி அளிக்கவில்லை என்று என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து இத்தனை வருடங்களாக நடைமுறையில் இல்லாத ஒன்று இன்று மட்டும் குறிப்பிட்டு மறுப்பதற்கு காரணம் கேட்டுள்ளனர்.இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட உடனடியாக காவல் துறையினரும் கோவிலுக்குள் நுழைந்தனர்.

சங்கரன்கோவில் கோவிலில் செய்தியாளருடன் வாக்குவாதம்

ஏற்கனவே சங்கரன்கோவில் முழுவதும் தொடர்ந்து கோவிலுக்குள் நடக்கும் அனைத்து பூஜைகளுக்கும் , கட்டண தரிசனங்களும் அதிகப்படியாக கடந்த வாரத்தில் கோவில் நிர்வாகம் உயர்த்தி உள்ளது.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சார்பிலும் இயக்கங்கள் ஆன்மீக சங்கங்கள் சைவ சித்தாந்த சபை , அகில இந்திய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்டவை தங்களது எதிர்ப்பை கண்டன ஆர்ப்பாட்டம் மூலமாகவும். கண்டன சுவரொட்டி மூலமாகும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது செய்தியாளர் களையும் கோயிலுக்குள் அனுமதி மறுக்கும் நிர்வாகத்தினர் உடன் பக்தர்களும் ஒன்றுகூட ஆரம்பித்த போது காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அனைவரையும் சமாதான பேச்சுவார்த்தை கூறி அனுப்பி வைத்தனர்.இதனால் சங்கரன் கோவிலில் பிரதோஷ வழிபாடு செய்ய வந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

error: Content is protected !!