February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

31 வது சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நிரல்

போக்குவரத்து ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் தென்காசி எஸ் ஜவஹர் ஐ.ஏ.எஸ்., உத்தரவின் படி மாவட்டம் தோறும்சாலை பாதுகாப்பு குறித்த விழாக்கள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவது குறித்த அறிக்கையில் 2020 ஜனவரி 20 முதல் 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் – சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் முழுவதும் திட்டங்களின் அட்டவணையின்படி . போக்குவரத்து, காவல்துறை, நெடுஞ்சாலைகள், கல்வி, சுகாதாரம், தகவல் மற்றும் விளம்பரம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஓட்டுநர் பள்ளிகள், கார் விநியோகஸ்தர், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பிற தொடர்புடைய நிறுவனங்களைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மட்ட அதிகாரிகளின் ஈடுபாட்டுடன்
பாதுகாப்பான சாலைகளின் தேவையை எடுத்துக்காட்டுவதற்கும் வலியுறுத்துவதற்கும் மற்றும் பொது மக்களிடையே சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் 31 வது சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படும்

31 வது சாலை பாதுகாப்பு வார விழாவின் (2020) நிகழ்ச்சி நிரல்
முதல் நாள் : 20.01.2020
இருசக்கர வாகனங்களில் தலைகவசத்துடன் மகளிர் பேரணி நடத்துதல். (மாவட்ட
அளவில் மகளிர் சுயஉதவி குழுவினரால் நடத்தப்பட வேண்டும்). அனைத்து முக்கிய சந்திப்புகள், வாரச்சந்தைகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை சாலை பயன்படுத்துவோர் மற்றும் அனைத்து ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
இரண்டாம் நாள்: 21.01.2020
• சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடைபேரணி (Walkathon). (சென்னை மாநகரில் சேப்பாக்கம் மைதானத்திலிருந்து / ஐ லேண்ட் மைதானம் வரை இதர மாவட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அமைச்சர்கள் தலைமையில்)
பங்கேற்பாளர்கள் : ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், வாகன விற்பனையாளர்கள்,IRT ஓட்டுநர்கள் மாநகரப் போக்குவரத்து பேருந்து ஓட்டுநர்கள், NSS, ஊர்க்காவலர் படையினைர் மற்றும்
காவல் துறை ஓட்டுநர்கள், வாகன உற்பத்தியாளர்கள், அரசு சாரா அமைப்பினர்.
• சாலை விதிகளை மீறுவோருக்கு ரோஜாப்பூ வழங்குதல்.
மூன்றாம் நாள்:22.01.2020
இலவச மருத்துவ உடல் பரிசோதனை மற்றும் கண்பரிசோதனை முகாம் நடத்துதல். (இடம் : சுங்கச்சாவடி மற்றும் தொழிற்சாலைகளில்) (பங்கேற்பாளர்கள் : பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்கள், அரசு பேருந்து ஓட்டுநர்கள்
மற்றும் வாகன ஓட்டுநர்கள்.) நான்காம் நாள் : 23.01.2020
கல்லூரி மற்றும் பள்ளிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். 1) ஓவியப்போட்டி 2)பேச்சுப்போட்டி 3)சிறந்த சாலை பாதுகாப்பு வாசகத்திற்கான போட்டி 4) கருத்தரங்கம் 5) பட்டிமன்றம் 6) கலை நிகழ்ச்சிகள்
ஐந்தாம் நாள்: 24.01.2020
உச்சநீதி மன்ற சாலை பாதுகாப்பு குழு அறிவுறுத்தலின் பேரில் கீழ்க்கண்ட 6 போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக பொறியியல் கல்லாரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாவணவர்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழப்புணர்வை ஏற்படுத்துதல். 1) அதிக வேகம் 2) அதிக பாரம் ஏற்றுதல் 3)சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் 4)குடிபோதையில் வாகனம் 5)சிவப்பு விளக்கை தாண்டுதல் 6)வாகனம் இயக்கும்போது செல்போன் பேசுதல் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மற்றும் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் வழங்கும்
சாலை பாதுகாப்பு குறித்த உரை. ஆறாம் நாள்: 25.01.2020
. சாலைப் பாதுகாப்பு குறித்த செயலாக்கப் பணிகள் மேற்கொள்ளுதல், அதிவேகம்,
அதிகபாரம், தலைக்கவசம் அணியாமல் பயணித்தல், சீட்பெல்ட் அணியாமல் பயணித்தல், வாகனத்தை ஓட்டும்போது கைபேசியை பயன்படுத்துதல் போன்ற விதிமீறல்கள் குறித்த சிறப்பு வாகன சோதனை மேற்கொள்ளுதல். சுங்க சாவடிகளில் சாலைப்பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல் மற்றும் வாகனத்தின் பின்புறங்களில் சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டுதல் மற்றும் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக தடம் மாறுதல், அதிக பாரம் ஏற்றுதல் வாகனத்தினை முந்தி செல்லுதல் சம்பந்தமாக அறிவுரை வழங்கி சோதனை மேற்கொள்ளுதல். இரவில் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி சாலைபாதுகாப்பு குறித்து அறிவுறுத்துதல்.
ஏழாம் நாள்: 27.01.2020
வாகன விற்பனை முகவர்கள், ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் மற்றும் நடத்துநர்களின் ஊர்வலம் நடத்துதல். சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், மற்றும் பிரதிபலிப்பான் பொருத்துதல். விபத்து முதலுதவி குறித்து 108 பணியாளர்கள் வழங்கும் செயல் விளக்க நிகழ்ச்சி. ஆகியவை நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!