June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதி கனமழைக்கான எச்சரிக்கை மக்கள் பாதுகாப்பாக இருக்க ரா.சரத்குமார் வேண்டுகோள்.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இன்று முதல் வருகிற 22ஆம் தேதி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தமிழ்நாட்டில் குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பெரும் சவாலான சூழலை எதிர்கொள்ளும் நிலை இருந்தது.

ஏற்கெனவே வெள்ளபாதிப்புகள் உண்மைநிலையை உணர்த்தி சென்றநிலையில், தற்போது மீண்டும் அந்த நிலை ஏற்படாமல் இருக்கும் வகையில், வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தீவிர கவனம் செலுத்தி, நீர்நிலைப்பகுதி, தாழ்வான பகுதி அருகே வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் முகாமிட்டு வசிக்க ஏற்பாடு செய்யவும், வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். பேரிடர் மீட்புக்குழுவினர் தயார்நிலையில் இருப்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அவசரநிலை சூழலில், பேரிடர் மீட்புக்குழுவினரின் உதவி தேவைப்படுவோர் அவர்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக தொலைதொடர்பு வசதிகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்களும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பு மற்றும் அரசின் அறிவிப்புகளை கவனத்தில் கொண்டு, அவர்களது நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுயபாதுகாப்பையும், குடும்பத்தாரின் பாதுகாப்பையும் உறுதி செய்து, மக்கள் யாரும் பாதிக்கப்படாத வகையில் மழையை எதிர்கொள்வோம் என கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் பாஜக பிரமுகருமான ரா.சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

About Author

error: Content is protected !!