May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆய்வுக்கு காத்திருக்கும் காவலர்கள் வாகனம்

நெல்லை – காவலர்களுக்கான வாகனங்கள் ஆய்வு

நெல்லை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு இன்று நடைபெற்றது .

ஆய்வுக்கு காத்திருக்கும் காவலர்கள் வாகனம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான பரேடு சோதனை ஆய்வு , காவலர்களுக்கான சீருடை உட்பட உடமைகள் ஆய்வு , கலவரம் வந்தால் தடுப்பது எப்படி என்ற டெமோ சோதனை, மற்றும் மாநகர காவல் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும் பயன்படுத்தும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆய்வு ஆகிய ஆய்வுகள் வருடத்திற்கு ஒருமுறை மாநகர காவல் ஆணையாளரால் நடத்தப்படும். இந்த ஆய்வு இன்று மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தீபக் டமோர் அவர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மாநகர காவல் துறையினரால் பயன்படுத்தப்படும் சுமார் 250 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டன . இந்த ஆய்வில் மாநகர துணை ஆணையாளர் சரவணன், ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர் .

About Author

error: Content is protected !!