May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம் காவல் துறை துணை ஆணையர் சரவணன் பேச்சு

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் குழந்தைகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மேல் படிப்பிற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருநெல்வேலி மாநகர சட்டம் & ஒழுங்கு காவல் துறை துணை ஆணையர் ச.சரவணன் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தி
பாராட்டி பேசினார்

அவர் பேசுகையில் அதிக மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்த உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் . உங்களின் வெற்றிக்கு பின் இருக்கும் உங்களது பெற்றோரின் இரவு நேர கண்விழிப்பிற்கு நன்றி கூற ஒரு போதும் மறவாதீர்கள் .

உங்களுடையை மேற்படிப்பு என்பது உங்களைப் பொருத்தவரை உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆனால்அது உங்களுடைய பெற்றோரின் இலட்சியம் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

இன்று பரிசு வாங்கும் இடத்தில் உள்ள நீங்கள் அடுத்த சில ஆண்டுகள் கடினமாக உழைத்தால் பரிசு கொடுக்கும் என் இடத்திற்கு வந்து விடலாம்.

உங்கள் பெற்றோருக்கு அதிகாரியாக வந்து விடலாம். முயற்சி செய்யுங்கள் உங்களால் முடியும் இவ்வாறு அவர் பேசினார்

செய்தியாளர் நெல்லை டேவிட் 

About Author

error: Content is protected !!