February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாவூர்சத்திரத்தில் வெளிநாட்டு பல்லாரி

தென்காசி மாவட்டத்திற்க்கு ஹாலாந்து நாட்டில் இருந்து பல்லாரி வரவால் விலை சரிந்தது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தை பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் ஆகும்.கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பல்லாரி கிலோ ஒன்றுக்கு தரம் வாரியாக ரூ.170 முதல் 200 வரை விற்று வந்தது.
பல்லாரி வரலாறு காணாத அளவிற்கு விலை உயர்ந்து விற்கப்பட்டதால் இந்திய அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பல்லாரியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியது.இதனையடுத்து பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு மும்பை மாநிலத்திலிருந்து மொத்த வியாபாரிகள் சில்லறை வியாபாரிகள் மற்றும் கேரள வியாபாரிகள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர்.
ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக பல்லாரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் தினசரி 4 டன்னுக்கு குறைவாக விற்பனைக்கு வருகின்றது.வரத்து குறைவு தேவை அதிகரிப்பால் பல்லாரி கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் 165 வரை மொத்த விற்பனையாக விற்கப்பட்டது.
வெளிநாட்டு பல்லாரி வரவால் விலை குறையும் என நினைத்து காய்கறி மொத்த வியாபாரிகள் எகிப்து நாட்டில் இருந்து பல்லாரியை இறக்குமதி செய்தனர்.ஆனால் எகிப்து பல்லாரியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் பொதுமக்கள் அந்த பல்லாரியை வாங்காமல் உள்நாட்டு பல்லாரியை வாங்கினர்,
இதனால் விலை குறையும் என எதிர்பார்த்த நிலையில் விலை கூடுதலாக விற்பனையானது. இந்நிலையில் பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு ஹாலந்து நாட்டில் இருந்து பல்லாரியை இறக்குமதி செய்து விற்று வருகின்றனர்.மும்பை மற்றும் ஹாலந்து பல்லாரியின் வரவால் கிலோ ஒன்றுக்க ரூ.165ல் இருந்து ரூ.125 ஆக குறைந்துள்ளது.இன்னும் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விலை இதை விட குறைய வாய்ப்புள்ளதாக பல்லாரி மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்

About Author

error: Content is protected !!