June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி? சீமானுக்கு ஒரு நீதியா?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கே.எஸ்.அழகிரி அவர்கள் கேள்வி

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விமர்சனம் செய்து பேசியதற்காக நெல்லை கண்ணனைக் கைது செய்து இருக்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்து புதைத்தோம் என்று பேசிய சீமானை நீங்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை?

சீமான் பேச்சு குறித்துக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி, அமித்ஷாவுக்கு எதிராகப் பேசினால் உடனடியாகக் கைது செய்கிறீர்கள். ஆனால் ராஜீவ் காந்திக்கு எதிராகப் பேசினால் எந்த நடவடிக்கையும் இல்லை.என அறிக்கை ஒன்றை வெளியிட்டுளார்

திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் தகவல் நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தார்

பர்னபாஸ் தலைமையிலான தனிப்படை பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் அவரை கைது செய்துள்ளனர் அவர் நெல்லை கொண்டுவரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

About Author

error: Content is protected !!