February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெல்லையில் குடியுரிமைச் சட்ட நகல் கிழிப்பு போராட்டம்

திமுக கழக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட கழக செயலாளர் மு.அப்துல் வஹாப் தலைமையில் மேலப்பாளையம் பஜார் திடலில் நாளை (13.12.2019) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மத்திய அரசின் புதிய குடியுரிமைச் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடைபெறுகிறது

அதுபோது மத்திய மாவட்ட கழக நிர்வாகிகள்,மாநகர கழக செயலாளர்- நிர்வாகிகள்,ஒன்றிய கழக செயலாளர்கள்-நிர்வாகிகள், பேரூர் கழக செயலாளர்கள்-நிர்வாகிகள்,பகுதிக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள்,வட்டக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள் ,ஊராட்சி கழக செயலாளர்கள்-நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி,மகளிர் அணி,மாணவர் அணி,தொழிலாளர் அணி,தொண்டர் அணி,பொறியாளர் அணி,வழக்கறிஞர் அணி,மகளிர் தொண்டர் அணி,இலக்கிய அணி,மீனவர் அணி,நெசவாளர் அணி,ஆதிதிராவிட நலக் குழு,விவசாய அணி,விவசாய தொழிலாளர் அணி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை,மருத்துவர் அணி,வர்த்தக அணி,சிறுபான்மை நல உரிமை பிரிவு, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள், மாநகர அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.என நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!