July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மனைவி தலையை வெட்டிய முத்துராஜ்

குடிக்க பணம் கொடுத்த மனைவியின் தலையை வெட்டிய கணவருக்கு ஆயுள்தண்டனை

மனைவி தலையை வெட்டி துண்டித்து கொலை செய்த துப்புரவு தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை   தென்காசி மாவட்ட நீதிபதி தீர்ப்பு

மனைவி தலையை வெட்டிய முத்துராஜ்

சீதபற்பநல்லூர் அருகே வெள்ளாளங்குளத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த மனைவியை தலையை வெட்டி துண்டித்து கொலை செய்த துப்புரவு தொழிலாளிக்கு தென்காசி கூடுதல் மாவட்ட நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்

சீதபற்பநல்லூர் அருகேயுள்ள வெள்ளாளங்குளம் அருந்ததியர் தெருவில் வசிப்பவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி ஜமுனா (எ) காஞ்சனா (46). இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். முத்துராஜ் துலுக்கர்குளம் பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடி பழக்கம் உண்டு. குடிப்பதற்காக அடிக்கடி தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வது முத்துராஜின் வழக்கம். கடந்த 9.9.2016 அன்று வீட்டில் ஜமுனா சமையல் வேலையாக இருந்துள்ளார்

அப்போது முத்துராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார் அதற்கு ஜமுனா தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே. ஆத்திரம் அடைந்த முத்துராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஜமுனா கழுத்தில் வெட்டியுள்ளார் ரத்த வள்ளத்தில் ஜமுனா கீழே விழவே ஆத்திரம் அடங்காத முத்துராஜ் ஜமுனாவின் கழுத்தை அறுத்து துண்டித்துள்ளார். இதனால் ஜமுனா அதே இடத்தில் பாரிதாபமாக இறந்து விட்டார் . இதனை அடுத்து முத்துராஜ் தனது மனைவி தலையை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.
இதுகுறித்து முத்துராஜ் இளைய மகள் ஆர்த்திகா (16) சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ஜமுனாவின் துண்டிக்கப்பட்ட தலையை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அருகே புதருக்குள் வீசிவிட்டதாக தெரிவித்தார்

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று ஜமுனாவின் தலை, உடல் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை மீட்டனர் உடலையும், தலையையும் பிரேத பாரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இந்த வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி விஜயகுமார் வழக்கினை விசாரணை நடத்தி மனைவியை தலையை வெட்டி துண்டித்து கொலை செய்த முத்துராஜிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார் . இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ராமச்சந்திரன் ஆஜரானார்

About Author

error: Content is protected !!