February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மணிமுத்தாறு அணையில் படகு சேவை சோதனை ஓட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மணி முத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளுள் ஒன்று. இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாகப் பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. மழைக்காலத்தில் பெருவெள்ளமாக இது பாய்கிறது.

இந்த நீர் மழைக்காலத்தில் தாமிர பரணியில் கலந்து வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க அப்போதைய தமிழக முதல்வர் காமராசரால் கொண்டு வரப்பட்ட அணைத் திட்டம் இது, சிங்கம்பட்டி அருகே 1958 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த அணை. இந்த அணையில் 118 அடிவரை நீரைத் தேக்கலாம். அணையில் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.

அணையில் தேக்கப்படும் நீரின் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மேற்கண்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக இந்த அணை உள்ளது. மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகின்றன
இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு மணிமுத்தாறு அணையில் வனத்துறை சார்பில் சோலார் படகுசவாரி சோதனை ஓட்டம் இன்று துவங்கியது இதானால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

SOURCE WIKIPEDIA

About Author

error: Content is protected !!