February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி தனியார்மயம் தென்காசியில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் மத்திய அரசின் எல்ஐசி தனியார்மயக் கொள்கையை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து தென்காசி எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், பணியிடைப் புறக்கணிப்பு நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். பத்மநாபன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மாரியப்பன், சிஐடியு சங்கத்தின் தலைவர் அயூப்கான், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் ராமமூர்த்தி, எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் சார்பில் கனகராஜ் ஆகியோர் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ததை கண்டித்தும், அந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும். எல்ஜசி பாலிசிதாரர்கள் நலன் காக்கப்பட வேண்டும். எல்ஐசி பிரிமியம் திற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், என்பதை வலியுறுத்தி பேசினர்.

தென்காசியில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தென்காசி எல்ஐசி அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பணிவிடை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தென்காசி எல்ஐசி அலுவலக ஊழியர்கள் மற்றும் எல்ஐசி முகவர்கள் லட்சுமி நாராயணன், வேணுகோபால், இசக்கியப்பன், குமார், சங்கரன், தங்கப்பாண்டியன், வடிவேல், சந்திரசேகர், சுந்தர், துரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

About Author

error: Content is protected !!