தென்காசியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்கள் மற்றும் தொகுதி திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள தலைவர், அமைப்பாளர்கள், அணி நிர்வாகிகள் கூட்டம் தென்காசி கலைஞர் அறிவாலயத்தில் வைத்து
மாநில துணைச் செயலாளர் மருத்துவர் செண்பக விநாயகம் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் வரவேற்றார்
. மாவட்ட தலைவர் டாக்டர் மாரிமுத்து தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ராஜா எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். திமுக மருத்துவ அணி மாநில தலைவர் கனிமொழி சோமு, மாநிலச் செயலாளர் எழிலன் நாகநாதன் எம் எல் ஏ சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மருத்துவரணி சார்பில் தேர்தல் பணியினை சிறப்பாக செய்திட அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவரணி சிறப்பாக செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
. இறுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. தென்காசி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்