தென்காசியில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபெறும் நடைபயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்கிற திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட சுகாதார நடை பாதை கண்டறியப்பட்டு, தினசரி நடை பயிற்சியை மேற்கொள்பவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி இன்று தமிழக முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டத்தை விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் துவங்கி காசிமேஜபுரம், இலஞ்சி திருவிலஞ்சி குமாரசாமி கோவில் சுற்றுப்பாதை வழியாக 8 கிலோமீட்டர் நடைப்பயணம் நடக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ராஜா மற்றும் மருத்துவ துறையின் இணை இயக்குனர் முரளிசங்கர், தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், நகர்மன்ற தலைவர் சாதிர், தி.மு.க ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், அரசு வழக்கறிஞர் வேலுச்சாமி, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஷேக் அப்துல்லா, காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சந்தோஷ், வட்டார தலைவர் பெருமாள், நகர தலைவர் மாடசாமி சோதிடர், நகர பொருளாளர் ஈஸ்வரன், நகர துணைத் தலைவர்கள் சித்திக், தேவராஜன், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நடைப்பயிற்சியை மேற்கொண்டனர்.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்