தென்காசி இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ் மன்ற விழா
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொறுப்பு) தங்கம் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் ஷீலா நவரோஸ் ஆரம்ப ஜெபம் செய்தார். மாணவ ஆசிரியர் ஜெசுலின் அமிர்தா வேத பகுதி வாசித்தார் தமிழ்த்துறை பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வரவேற்று பேசினார்
மாணவ ஆசிரியர்களிடையே ஓவியம், கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றன
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி எம்.எல்.ஏ வுமான , எஸ். பழனி நாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் ஆகியோர் சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினர்.
விழாவில் இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், பேரூர் திமுக செயலாளர் முந்தையா, ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன்,மாணவ ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்