குற்றாலத்தில் திமுக இளைஞரணி வடக்கு – தெற்கு ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இளைஞரணி அமைப்பாளர்கள் நேர்காணல் மண்டலம் 8-க்கான, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. தென்காசி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்திற்கான ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் குற்றாலம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது

இந்த நேர்காணலை மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் G.P.ராஜா, ஜோயல், இன்பரகு, அப்துல் மாலிக், ஆனந்த குமார்,பிரகாஷ், இளையராஜா,பிரபு, சீனிவாசன் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜா, பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத் தலைவர் KNLS சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்