April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரின் முதல் பெண் நீதிபதி

கீழப்பாவூரின் முதல் பெண் நீதிபதி

தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில், காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1ஆம் தேதி, டி.என்.பி.எஸ்.சி எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கு, கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்தது. இதில், 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான முதல் நிலை தேர்வு, கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர், வேலுார், விழுப்புரம் ஆகிய 9 இடங்களில், சிவில் நீதிபதி முதல் நிலை தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு கடந்த நவம்பரில் நடந்தது.
இந்நிலையில், சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி. 11 நாட்களாக நேர்முகத் தேர்வுகள் நடை பெற்றது பின்னர் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்.அறிவித்தது இதில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சிதம்பரபுரம் தெரு அம்பாள் தட்டச்சுப்பயிலக உரிமையாளர் சோமசுந்தரம் – திருமதி மரகத லக்ஷ்மி அவர்களின் புதல்வி செல்வி சோ.கோகிலா (வயது 27 ) மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஆனந்தவள்ளி (President, Women Advocate Association) அவர்களின் ஜுனியருமான இவர் B.Tech LLB(Hons) LLM தேர்ச்சி பெற்றுள்ளார்கள். மேலும் சட்டபடிப்பை SRM School of Law விலும், சட்ட மேற்படிப்பை திருநெல்வேலி அரசு சட்ட கல்லூரியிலும் முடித்துள்ளார். மற்றும் இவர் Indian Law Institute, Delhi யில் Cyber law course உம், தட்டெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர் வேகமும் முடித்துள்ளார். இளம் வயதில் தேர்வான  கீழப்பாவூரின் முதல் பெண் நீதிபதி என்பதால் இவருக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

 

About Author

error: Content is protected !!