சொத்திற்க்காக 17 வயது சிறுவனை கழுத்தறுத்து கொலை செய்த அண்ணன்-தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள மருதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் திருமலைகுமார் (வயது 17 இறக்கும்போது) இவருக்கும், இவரது சித்தப்பா மகனாகிய காமராஜ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 2014-ஆம் வருடம் திருமலைகுமாரை வீடு புகுந்து காமராஜ் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
அதற்கு உடந்தையாக காமராஜின் தந்தையான அருமைகனி (70) மற்றும் தாயான ராஜாத்தி (63) ஆகிய இருவரும் செயல்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலைகுமாரை கொலை செய்த காமராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அருமைக்கனி மற்றும் ராஜாத்தி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி, சொத்திற்க்காக திட்டமிட்டு 17 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக காமராஜ், அருமைக்கனி, ராஜாத்தி ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா உத்தரவு பிறபித்தார்.
மேலும், சொத்துக்காக தம்பியை கொலை செய்த அண்ணன் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More Stories
பூரண குணமடைந்து வீடு திரும்பினார் கேப்டன்
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சாதனை
கண்டித்த முதல்வர் , மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்.பி செந்தில் குமார்