June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கேப்டன் ரீசண்ட் போட்டோ வெளியானது

இன்று வழக்கம் போல கேப்டன் பற்றி பலர் பரபரப்புக்காக செய்தி வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொண்டனர் இந்நிலையில் தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளார் அதில்

இரண்டு தினங்களுக்கும் முன்பு நான் இதே போல ஒரு வீடியோ வெளியிட்டிருந்தேன் கேப்டன் நன்றாக இருக்கிறார். வீண் வந்திகள் வர வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டேன் ஆனாலும் கேப்டனுக்கு செயற்கை சுவாசம் தரப்படுவதாகவும்

முதலமைச்சர் வந்து கேப்டனை சந்தித்து எனக்கு ஆறுதல் சொன்னது போல தொடர்ந்து அனைத்தும் பொய்யான தகவல்களைநீங்கள் தொடர்ந்து youtube சேனல் நியூஸ் சேனல்களையும் போட்டுட்டு இருக்கீங்க இது ஒட்டுமொத்தமாக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் உறவினர்களை திரையுலகினரை எங்கள் குடும்பத்தாரை மிகப்பெரிய ஒரு மன உளைச்சலுக்கு இந்த வதந்தி செய்திகள் பொய்ச் செய்திகள் கொண்டு செல்கிறது , இங்க நாங்க கேப்டன் கூடவே இருக்கிறோம்

மருத்துவமனைக்குள்ள அமைதியாக எந்தவொரு பரபரப்பும் இல்லாம நல்ல படியாக இருக்கிறார் ஆனால்
இந்த பரபரப்புகளும் வதந்திகள் அத்தனையுமே வெளியே தான் இது உலாவிக்கிட்டு இருக்கு தயவு செஞ்சு மனிதநேயத்தோடு வதந்திகளை பரப்புவதை யாராக இருந்தாலும் தயவு செய்து கேப்டன் நல்லா இருக்காரு இன்னும் இரண்டு நாளில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் வெகு விரைவில் கேப்டன் வீடு திரும்ப இருக்கிறார் நிச்சயம் வந்து அனைவரையும் சந்திக்க இருக்கிறார் அதனால் யாரும் வீண் வதந்திகளை நம்பாதீர்கள்

நான் இன்னைக்கு நானும் எனது மகன் சண்முகப் பாண்டியன்னும் கேப்டனை சந்தித்த புகைப்படத்தை உங்களுக்காக போட்டு இருக்கோம் யாருமே வதந்திகளை பொய்ச் செய்திகளை பரப்பாதீங்க எதை யாரும் நம்ப வேண்டாம் என்பதை மீண்டும் உங்கள் எல்லாருக்கும் பார்த்து நன்றி வணக்கம் என தனது வீடியோ பதிவு மூலம் கேப்டன் மனைவி திருமதி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!