தென்காசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீஸ் அதிகாரியின் நூதன பிரச்சாரம்
பொதுவாக திருடர்கள் கைவரிசை திருவிழா காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் அதிகமாக இருக்கும். என்னதான் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் பொதுமக்கள்தான் உஷாராக இருக்க வேண்டும்.
தென்காசி நகரில் காவல் ஆய்வாளராக உள்ள பாலமுருகன் தனது பாதுகாப்பு பணியிடையே நூதன யுக்தி ஒன்றை கையாண்டு வருகிறார்.

மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பேருந்து நிலையம், ஜவுளிக்கடை, டிவி விற்பனை கடைகளுக்கு சென்று நீங்கள் எந்த வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மக்களிடையே மினி சொற்பொழிவாற்றுகிறார்
இது தவிர பண்டிகை காலங்களில் ஜவுளி மற்றும் நகை வாங்க வரும் பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து துண்டு பிரசுரம் ஒன்றை தயாரித்து அதை மக்கள் கூடும் இடங்களில் அவரே நேரடியாக விநியோகிக்கிறார்.
அதிக நகை அணிந்து வரும் பெண்களை இதுபோன்று பொது இடங்களில் நகைகளை. வெளியே தெரியுமாறு அணிய வேண்டாம். உங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் இப்படி இருந்து கொள்ளுங்கள் என்று கனிவோடு அறிவுறுத்துகிறார்
அவரது இந்த செயல்பாடு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.காவல் ஆய்வாளர் பாலமுருகனின் இந்த நடவடிக்கைக்கு தென்காசி மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் பாலமுருகன் ஒரு கம்பீர தோற்றம் கொண்டவர் அவரை பார்த்தாலே ஒரு வித பயம் இருக்கும் , ஆனால் அந்த மாயையை உடைத்து மக்களோடு மக்களாக நின்று சிலரிடம் தனது தனிப்பட்ட முறையில் கூட அவர்களின் கவனக் குறைவை சுட்டிக் காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் ,
காவலர் உங்கள் நண்பன் என்பதை மெய்ப்பித்துவிட்டார்
More Stories
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலய ஐப்பசிமாத தேரோட்டம்
குற்றாலத்தில் காமராஜர் சிலை லூர்து நாடார் கோரிக்கை
மத்திய அரசை கண்டித்து அக்.16-ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு