March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அயோத்தி தரிசனம்  ஆன்லைனில் முன்பதிவு

அயோத்தி தரிசனம்
ஆன்லைனில் முன்பதிவு துவக்கம்

அயோத்தி கோவிலில் நாளை முதல் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்ட ஸ்ரீராம் மந்திர் ஆலயத்தில் இன்று பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு  பால ராமர் சிலை இன்று கருவறையில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

500 ஆண்டு காலத்திற்குப் பின் இந்த வைபத்துக்காக இந்திய திருநாடு முழுக்க விழாக்கோலம் பூண்டது . இன்று விஐபிகள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நாளை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமும் 3 லட்சம் பேர் இங்கு தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

காலை 6.30 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 மணிமுதல் இரவு 7.30 மணிவரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

நடை திறக்கும் நேரத்திலும் இரவு நடை அடைக்கும் நேரத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இதையும் பொதுமக்கள் காணலாம்

பக்தர்கள் தங்கள் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து கொள்ள ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது

https://srjbtkshetra.org/  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்

பக்தர்களின் வருகை அதிகரிப்பதை பொறுத்து தரிசன நேரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

About Author

error: Content is protected !!