April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அச்சன்கோவில் திருவாபரண பெட்டி தென்காசி வந்தடைந்தது

அச்சன்கோவில் திருவாபரண பெட்டிக்கு தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது

ஐயப்பனின் ஐந்து படை வீடுகளில் ஒன்றான அச்சன்கோவில் தென்காசியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் இக் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம் .
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் திருவிழா உற்ஷவம்.. நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகிறது. 25 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தேரோட்டம்.. 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆராட்டு.. மற்றும் 2, 3, 4, 5 திருவிழாவில் உற்சவபலி பூஜையும்.. 6, 7, 8 ஆம் திருவிழாவில் கருப்பன் துள்ளலும் நடக்கிறது.. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் அச்சன்கோவில் ஐயப்பனுக்கு சபரிமலை சாஸ்தாவைப் போல முழு அளவில் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு திருவிழா விமர்சனையாக நடக்கும்.
இக்கோயிலுக்குரிய ஆபரணங்கள் அனைத்தும் கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. திருவிழா துவங்குவதற்கு முந்தைய நாள் இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆபரணங்கள் அச்சன்கோவிலுக்கு எடுத்து வரப்படும் . வரும் வழியில் இந்த ஆபரணங்களுக்கு பல்வேறு ஊர்களில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது
அதிலும் குறிப்பாக தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் முன்பு கடந்த 30 ஆண்டுகளாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவாபரண பெட்டி வரவேற்பு நிகழ்ச்சி திருவாபரண பெட்டி வரவேற்பு கமிட்டி தலைவர் ஏசிஎஸ்ஜி ஹரிஹரன் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் சிறப்பாக நடந்தது.இன்று காலை இரு மாநில போலீஸ் பாதுகாப்புடன் புனலூர் கருவூலத்தில் இருந்து திருவாபரணம் எடுத்துவரப்பட்டது.பின்னர் அங்கிருந்து ஆரியங்காவு புளியரை செங்கோட்டை இளஞ்சி போன்ற ஊர்களில் பக்தர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டு பிற்பகலில் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலை வந்தடைந்தது அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திருஆபரண பெட்டியை தரிசனம் செய்தனர்.மேலும் சுமார் 1500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

About Author

error: Content is protected !!