February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கடையநல்லூர் நகர திமுக சார்பில் மெயின் பஜார் விடிஎஸ் ஆர் மஹாலில் ஊழியர் கூட்டம் அவைதலைவர் சங்கரன் தலைமையில் நடைபெற்றது இதில் மஸ்தான், அப்துல்வகாப் ,சங்கரன் ,பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் சேகனா என்ற சேக் உதுமான் வரேற்புரையாற்றினார் .இந்த கூட்டத்தில் எதிர்வரும் தமிழர் திருநாள் பொங்கல், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கழகத்தின் வளர்ச்சி பணி குறித்து உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது இதில் 33 வார்டு கிளை நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது

தை முதல்நாள் தமிழர் திருநாளாக கொண்டாடி கொடியேற்றி இனிப்பு வழங்குவது

இந்திய சிறுபான்மை மக்களையும் ஈழத்தமிழர்களையும் பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டிப்பதும் இந்திய குடியுரிமை மசோதா சட்டத்தை ஆதரித்து அடிமை அதிமுக அரசையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது
இது குறித்து திமுக தலைமை எடுக்கும் அனைத்து ஆர்ப்பாட்டம் போராட்டங்களை முன்னெடுத்து செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

வருகிற மார்ச் 1 ஆம் தேதி அன்று நமது கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆயிரப்பேரி என்கின்ற நீர்நிலை பகுதியில் வருவதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்களின் விருப்பப்படி தென்காசி நகர மையப்பகுதியில் அமைத்திட வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

About Author

error: Content is protected !!