June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விலையில்லா மிதிவண்டி வழங்கும் எம்.எல்.ஏ

கீழப்பாவூர் யூனியன் அரசு பள்ளிகளில் மிதிவண்டி வழங்கினர் எம்.எல்.ஏ

கீழப்பாவூர் யூனியன் பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் மற்றும் சான்றிதழ்களை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் எம்.எல்.ஏ

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ – மாணவிகள் 40 பேர்களுக்கு இலவச சான்றிதழ்களைசைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார் எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அந்தோணி ஜெய்சிங், சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமதி மற்றும் பலர் பேசினர். விழாவில் ஆர். எம். எஸ். ஏ. மூலம் நடத்தப்பட்ட செயல் திட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் மாநில அளவிலும் மற்றும் அறிவியல் பாடத்தில் மாவட்ட அளவிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் நரேந்திரமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வட்டார அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி உமாபாரதிக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சித்ராதேவி நன்றி கூறினார்.

இதேபோல் பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கி பேசினார் இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சதீஷ் கிங்ஸ்லி தலைமை வகித்த நிகழ்ச்சியில் 160 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது ஆசிரியர் லட்சுமி காந்தன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் உத்திர குணபாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் தமிழ் என்ற ராமசாமி, மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!