March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கவுதமி இங்கதான் இருக்கிறார் என நினைத்து கமல்ஹாசன் ஆபிஸ்ல நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்

இந்தியாவில் கொரொனோ பரவலாக பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீட்டில் அவர்களை தனிமை படுத்துவதற்காக அவர்கள் வசிக்கும் வீட்டில் தனி படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வருகிறது

இந்நிலையில் அண்மையில் நடிகர் கமலஹாசன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என மாநகராட்சி ஸ்டிக்கர் ஒட்ட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது விசாரித்ததில் அது உண்மை இல்லையென்றும் கமலஹாசனுடன் கௌதமி சேர்ந்து வாழ்ந்த போது அவரது பாஸ்போர்ட்டில் இந்த முகவரி இருந்ததால் அதை நினைத்து ஒட்டி விட்டார்கள் இது தான் உண்மை

இந்நிலையில் கமல்ஹாசன் கூறுகையில்
உங்கள் அன்புக்கு பெரிய நன்றி. என் வீட்டுக்கு வெளியில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரின் அடிப்படையில், என்னை கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் உங்கள் எல்லோருக்கும் தெரியும் நான் அந்த வீட்டில் வாசிக்கவில்லை என்று. அங்கு மக்கள் நீதி மையம் அலுவலகம் தான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
நான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை கொரோனா வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் 2 வாரமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்செய்தி வெளியிடுபவர்கள் உறுதி செய்துவிட்டு வெளியிடவும், அதனால் வதந்தி பரவுவது தடுக்கப்படும்” என கமல் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனும் கௌதமி பற்றி வாய் திறக்க வில்லை ,

இருந்தாலும் அவரது தொண்டர்கள் மத்தியில் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் கூட இந்தியன் 2 பட விபத்து குறித்து தன்னை நடித்து காட்ட சொல்லி துன்புறுத்தியதாக கமல்ஹாசன் தெரிவித்தார் , இது அதிகாரிகள் கவனக்குறைவா அல்லது

அரசு வேண்டும் என்று எங்கள் தலைவரை அவமானப்படுத்த வேண்டும் என்று செய்ததா ? என மக்கள் நீதி மய்ய தொண்டர்கள் குமுறி வருகின்றனர்

About Author

error: Content is protected !!