June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி தீயணைப்பு நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

தென்காசி தீயணைப்பு நிலையத்தில் தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். தமிழக தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து தீயணைப்பு வீரர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வருகிறார். இந்நிலையில் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு வருகைபுரிந்தார் . அவருக்கு தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கி வரவேற்றனர்

பாதுகாப்பு உபகரணங்களான நுரை தெளிப்பான், தீயணைப்பு வாகனங்கள், தீ தடுப்பு ஆடைகள் , பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்கு ஈடுபடுத்தக் கூடிய ரப்பர் படகு, மரம் அறுக்கும் எந்திரம், இரும்பு அறுக்கும் எந்திரம் ஆகியவற்றை டிஜிபி சைலேந்திரபாபு இயக்கி அவற்றின் செயல்பாடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார் .

அதன் பின்னர் தீயணைப்பு நிலைய கோட்ட அதிகாரி மகாலிங்கமூர்த்தி மற்றும் தீயணைப்பு நிலைய போக்குவரத்து மோகன், தலைமை காவலர்கள் விஜயன், செல்வம் மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் .
ஆய்வில் மாவட்ட பகுதிகளில் சுற்றுலா தலமான குற்றாலத்தில் சீசன் காலங்களில் ஏற்படும் விபத்துக்கைளை தடுப்பது மற்றும் பெரிய உயரமான கட்டிடங்கள் அதிக அளவில் வந்துவிட்டதால் அதில் ஏற்படும் தீ விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த பகுதிக்கு ஏணியுடன் கூடிய லிப்ட் மற்றும் நவீன உபகரணங்கள் வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

About Author

You may have missed

error: Content is protected !!