March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வரும் காலத்திலும் அதிமுக ஆட்சிதான் -முதல்வர் பழனிச்சாமி நம்பிக்கை

வரும் காலத்திலும் அம்மாவின் ஆட்சிதான்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை

தமிழகத்தில் வரும் காலத்திலும் அம்மாவின் ஆட்சிதான் தொடரும் என தென்காசியில் நடைபெற்ற தென்காசி புதிய மாவட்ட துவக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்
தென்காசி புதிய மாவட்டம் உதயமானது. புதிய மாவட்ட துவக்க விழா தென்காசியில் நடைபெற்றது. விழாவிற்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தென்காசி மாவட்டத்தை துவக்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தும், 6 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசியதாவது:
தென்காசி பகுதி மக்களின் 33 ஆண்டு கால கோரிக்கையான தென்காசி தலைமையிலான புதிய மாவட்டம் இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதி மக்களின் நீண்டகால கனவு இன்றைக்கு நிறைவேற்றப்பட்டது .இதில் நானும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பொதிகை மலையில் குற்றாலம் அருவிகள் குளிர்ச்சியை ஏற்படுத்தும். தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நீர்வளம்இ நிலவளம்இ மலை வளம் நிறைந்தது இந்த மாவட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் இந்த பகுதி மக்கள் என்னிடத்தில் தென்காசி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். இந்தப் பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றைக்கு தென்காசி தலைமையிலான புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. 2018 வரையறை செய்யப்பட்ட முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக அரசு தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் திமுக வினர் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தென்காசி பகுதி மக்கள் இதுவரை மாவட்ட ஆட்சித் தலைவரை உயர் அதிகாரிகளை சந்திக்க 60 கிலோமீட்டர் பயணம் செய்து ஒன்றரை மணி நேரத்தை செலவழித்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்கும் நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் அரசு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பெறுவதற்கும் உங்கள் அருகிலேயே மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கொள்ளலாம்.
புதிதாக உருவாக்கப்பட்ட இருக்கிற தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர் ,சிவகிரி,ஆலங்குளம், சங்கரன்கோயில் திருவேங்கடம், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
அதைப்போலவே தென்காசி, செங்கோட்டை ,கடையநல்லூர்,புளியங்குடி, சங்கரன்கோயில் ஆகிய 5 நகராட்சிகள் தென்காசி மாவட்டத்தில் இடம்பெற உள்ளது மேலும் தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு கோட்டங்கள் இந்த மாவட்டத்தில் இடம்பெற உள்ளது .மேலும் 18 பேரூராட்சிகள், 261 வருவாய்க் கிராமங்கள் இந்த மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது . இந்த மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 76 ஆயிரத்து 627 பேர் வாழ்ந்து வருகிறார்கள்.கீழப்பாவூர் ,பாப்பாக்குடி க்கு 10 கோடி மதிப்பீட்டில் தாமிரபரணி குடிநீர் திட்டம்

மேலும் இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராமநதி ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம்இ செண்பகவல்லி அணைக்கட்டு திட்டம் போன்ற திட்டங்களையும் விரைவில் செயல்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு வேளாண்மை துறையில் சிறந்து விளங்குவதோடு உணவு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் கல்லூரிகள் மருத்துவக் கல்லூரிகள் பாலிடெக்னிக் கல்லூரிகள் ஆகியவை அதிக அளவில் திறக்கப்பட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் ஏரிகள் ஊரணிகள் சுமார் 1,250 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு தமிழக மக்களின் நலன் கருதி பொங்கல் விழா விழாவினை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது இதனை தடுப்பதற்கு திமுக நீதிமன்றம் வரை சென்றார்கள் ஆனாலும் அதனையும் மீறி பொது மக்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அதிமுக அரசு பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்து அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது அதனைத்தொடர்ந்து நமது அரசும் இதுவரை சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நாள் 453 திட்டங்களில் 328 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது 88 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது ஆனாலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடர்ந்து அம்மாவின் அரசை குறை கூறி வருகிறார் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் அம்மாவின் அரசு ஏழை எளிய மக்களுக்கு சுமார் 5 லட்சம் பேர்களுக்கு கூடுதலாக முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை இனிமேல் ஒரு லட்ச ரூபாய் வருமானம் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்குதல் பட்டா மாறுதல் செய்தல் உள்ளிட்ட பணிகள் உடனுக்குடன் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தமிழக மக்கள் தமிழக அரசுக்கு கொடுக்கின்ற கோரிக்கை மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு அனைத்து மனுக்களும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் அதிமுக அரசு மத்தியில் பாஜக அரசு உடன் கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் மூலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை என்று மு.க .ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார் ஆனால் நாங்கள் பல கோடி ரூபாய் செலவில் மதுரையில் தோப்பூர் பகுதியில் ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது அதிமுக பாஜக ஆட்சிதான்.
இப்போது மத்திய அரசின் உத்தரவு படி தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை புதிதாக உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டு உள்ளோம் அதன்மூலம் நமது மாணவர்கள் 900 பேர் மருத்துவ கல்லூரியில் இணைந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கும் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு வருகிறோம்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிமுக அரசை பற்றி தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தாலும் கடந்த மாதம் நடைபெற்ற நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் தமிழகத்தில் நடைபெறுகின்ற நல்லாட்சிக்கு சான்று வழங்கும் வகையில் மகத்தான வெற்றியை தந்திருக்கிறார்கள் அதற்காக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் வாக்காளப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அதிமுக அரசு பற்றி அபாண்டமாக பேசிவரும் திமுகவை இடைத் தேர்தலில் மக்கள் படுதோல்வி அடையச் செய்திருக்கிறார்கள் இனிவரும் எல்லா தேர்தல்களிலும் அதிமுக அரசை தமிழக வாக்காளர்கள் அதிமுக விற்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார்கள். தமிழகத்தில் அடுத்தும் அம்மாவின் ஆட்சிதான் அமையும் என்பதை உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்

About Author

error: Content is protected !!