May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பத்ம ஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபம் முதல்வர் திறந்து வைத்தார்

அயராத உழைப்பால் சிறப்பு பெற்றவர் சிவந்தி ஆதித்தனார்.என துணை முதல்வர் பேச்சு

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது .

பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்க வருகை புரிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழா விற்கு வருகை தந்த அவரை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர்’ நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

முன்னதாக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவரை ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பா.சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்துவைத்தார். தொடர்ந்து பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர்’ நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்திடிவி இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டு இருந்த நூலகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

விழாவையொட்டி காலை முதலே விழா நடைபெறும் இடத்தில் மக்கள் அலைகடலென திரண்டனர். திருச்செந்தூரே விழாக்கோலம் பூண் டது

விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், தூத்துக்குடி மாவட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது கூறியதாவது:-

தமிழ் இதழியல் முன்னோடியாக விளங்கியவர் சி.பா.ஆதித்தனார். பல சிறப்புகளை கொண்ட திருச்செந்தூருக்கு மேலும் சிறப்பு சேர்த்தவர் ஓவ்வொரு அடியாக நடந்து அயராத உழைப்பால் சிறப்பு பெற்றவர் ச

தந்தையின் சொல்படி அச்சுகோர்க்கவும், தொழிலாளியாக தனது பத்திரிகை வாழ்வை தொடங்கியவர் சிவந்தி ஆதித்தனார்.

தான் மட்டுமின்றி குடும்பம் , சமூகம் உயரவேண்டும் என எண்ணியவர் சிவந்தி ஆதித்தனார்.

பல்துறை வித்தகராக தனி முத்திரை பதித்தவர் திருச்செந்தூரின் சிறப்புகளுக்கு மேலும் சிறப்பாக அமைந்துள்ளது இந்த மணி மண்டபம்.

தொழிலாளர்களுடன் தொழிலாளியாக பணியாற்றியவர் பா.சிவந்தி ஆதித்தனார். பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது. இன்றைய இளைஞர்கள் உடனே சம்பாதிக்க வேண்டும் என அவசரப்படுகிறார்கள் என அவர் பேசினார்

About Author

error: Content is protected !!