May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கிராமப்பகுதியில் சிறந்த கிரிகெட் வீரர்கள் உள்ளனர் CSK விஸ்வநாதன் பேச்சு

கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் தனது முழு கவனத்தையும் அதிலேயே செலுத்த வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ விஸ்வநாதன் கூறியுள்ளார்

தென்காசியில்   தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் துவக்க விழா கூட்டம் நடைபெற்றது , இதில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ள லீக் போட்டிகளில் கலந்துகொள்ள தாலுகாவிற்கு மூன்று அணிகள் விதம் மொத்தம் 14 முதல் 21 அணிகள் சேர்க்கை அளவிலான கலந்தாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ விஸ்வநாதன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் தங்களது முழு கவனத்தையும் கிரிக்கெட்டில் செலுத்த வேண்டுமென்றும் கிராம பகுதியில் அதிக திறமை உடைய கிரிக்கெட் வீரர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களும் தங்களது திறமையை வெளிப்படுத்தி பெரிய வெற்றி அடைய வேண்டும் எனவும் அவர் கூறினார் இந்த நிகழ்ச்சியில் தென்காசி அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

About Author

error: Content is protected !!