March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி அரசு மருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமையில் தென்காசி மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும் நடந்தது. கூட்டத்தில் கொரானா வைரஸ் பற்றியும் தடுப்பு நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக கூட்டத்தில் கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து அலுவலகங்களுக்கும் தேவையானளவு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி இன்று காலை திருமதி கனகாம்பாள் ,வேளாண்மை உதவி இயக்குனர் அவர்களால் இரண்டு கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரங்கள் தென்காசி அரசு மருத்துவமனைக்கு, மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்களிடம் வழங்கப்பட்டது. மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள், கொரானா தடுப்பு நடவடிக்கைக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் ,உதவி இயக்குனர் வேளாண்மைத்துறை அவர்களுக்கும் நன்றியை கூறினார்.
இன்று அனைத்து பணியாளர்களுக்கும் கொரானா வைரஸ் எவ்வாறு பரவுகிறது அதனை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது வெளிநோயாளிகள் பகுதி மற்றும் உள்நோயாளிகள் பகுதிகளில் எவ்வாறு தரையை ,மேசைகளை, நாற்காலிகளை மற்றும் நாம் உபயோகிக்கும் பொருட்களை , கதவு கைப்பிடிகளை எவ்வாறு சுத்தமாக கிருமி நாசினிகள் கொண்டு துடைத்து, சுகாதாரமாக வைப்பது என்பது பற்றி விளக்கிக் கூறப்பட்டது. பணியாளர்களுக்கு கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் விளக்கி கூறப்பட்டது
நோயாளிகளுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கி காய்ச்சல் வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் ,என்னென்ன செய்யக்கூடாது என்பதை விளக்கி கைகளை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருப்பது பற்றியும், முக கவசம் அணிந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்பது பற்றியும், தனிமைப்படுத்துதல் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.

About Author

error: Content is protected !!