May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரரோனா வைரஸ் – மார்ச் 31 வரை பள்ளி விடுமுறை

பள்ளிக் கல்வி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் LKG, UKG (Pre-KG உட்பட) வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், LKG (Pre-KG உட்பட) வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கும், கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட வகுப்புகளுக்கு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

error: Content is protected !!