May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா வலுவாக உள்ளது என நிருபிப்போம் -பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள் 

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தொலைகாட்சி மூலம் உரை நிகழ்த்தினார் அவரது உரையிலிருந்து

உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா.கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் மெத்தனமாக இருக்கக்கூடாதுஅடுத்த சில வாரங்களுக்கு அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இந்தியாவை கொரோனா பாதிக்காது என நினைப்பது தவறு
கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவைமக்கள் தங்களைத் தாங்களே ஊரடங்கு உத்தரவிற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்:
திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது- கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது,சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வைரஸ் பரவலை தடுத்துள்ளது-மக்களை தனிமைப்படுத்தி, பரவலை தடுத்துள்ளது , 130 கோடிக்கும் மேல் மக்களை கொண்ட இந்தியா இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது கொரோனா எச்சரிக்கை மார்ச் 22-ஆம் தேதி ஞாயிறு அன்று யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது – மோடிநாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் , இதுவே நம் தாரக மந்திரம் மார்ச் 22ம் தேதி அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவில் அத்தியாவசிய சேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது
முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் வீட்டில் இருந்தே பணி செய்யும் முறைக்கு மாற வேண்டும்இரவு நேரங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நல்லது
தற்போது நாட்டு மக்களிடம் நான் ஒத்துழைப்பை வேண்டுகிறேன்கொரோனா பரவுவதை தடுத்து இந்தியா எவ்வளவு வலுவாக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்
கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு மார்ச் 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று மற்றவர்கள் நன்றி சொல்லுங்கள் கொரோனா வைரஸ் காரணமாக நம் மருத்துவ சேவைகள் மீது சுமை அதிகரிக்கக்கூடாது
தேவையின்றி மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் ,கொரோனா பாதிப்பால் பணிக்கு வரமுடியாத ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டாம், பாதிக்கப்பட்டவர் நோயிலிருந்து விடுபடவும் அவரது குடும்பத்திற்கு உதவி செய்யவும் வேண்டுகோள்,கொரோனா வைரஸ் நம்மை ஒன்றும் செய்யாது என நினைக்காதீர்கள் யாரும் நோய் தொற்றுக்கு ஆளாகாதீர்கள் நோய் தொற்றை யாருக்கும் பரப்பாதீர்கள் வரும் ஞாயிறன்று மாலை 5 மணிக்கு அனைவரும் கைதட்டியும், கரகோஷம் எழுப்பியும்..நமக்காக பணியாற்றுவோரை உற்சாகப்படுத்த வேண்டும்-
உங்களுக்கு ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவசரமில்லை என்றால் தள்ளிப்போடுங்கள்”
மார்ச் 22 ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு என்பதை தாண்டி மேலும் ஒரு விஷயத்தையும் கேட்கிறேன் தங்களை பற்றி கவலை கொள்ளாமல் மக்களுக்காக உழைக்கும் மருத்துவர்கள்…செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்வோர். அவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது கொரோனா வைரஸ் உலகப்போர் போல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரானா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பொருளாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க தனி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஏழைகள் யாரும் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது கொரோனாவிற்காக விடுப்பு வழங்கினால், சம்பள பிடித்தம் செய்யக்கூடாது
அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், ஊடகத்தினர் உள்ளிட்டோருக்கு மக்கள் தொந்தரவு கொடுக்க வேண்டாம்… அவர்கள் வெளியே வந்து பணி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்று உரையாற்றினார்

About Author

error: Content is protected !!