June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரிப்பன் பில்டிங்

சென்னை மாநகராட்சி பில்டிங்கில் புறாக்களுக்கு வலை

சென்னை மாநகராட்சி கட்டடங்களில் புறாக்கள் அடைவதை தடுக்க, மெல்லிய தடுப்பு வலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரிப்பன் பில்டிங்

மாட, மாளிகைகள், அரண்மனைகள் மற்றும் கோவில் கோபுரங்களில் புறாக்கள் அடைவது வழக்கம். புறாக்கள் குழுமையை விரும்பி இதுபோன்ற உயர்ந்த கட்டடங்களில் அடைகிறது. சென்னை மாநகராட்சி கட்டடத்தை கேட்கவா வேண்டும். ரிப்பன் பில்டிங் என பெயர் கொண்ட மாநகராட்சி தோற்றத்தில் அரண்மனை போல் காட்சியளிக்கிறது. ஆங்கிலேயர்கள் கட்டிய கட்டடமாச்சே. பழமையான ரிப்பன் பில்டிங்கில் தற்போது சில பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

பழங்கால கட்டடத்தின் முகப்பு மற்றும் கூரையின் மேற்புரத்தில் உள்ள இடுக்குகளில் ஆயிரக்கணக்கான புறாக்கள் தஞ்சமடைந்துள்ளன. குழுமையை விரும்பும் புறாக்கள் இங்கு தஞ்சம் புகுந்துள்ளன. புறாக்கள் அடைவதால், மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்களுக்கோ, அங்கு வரும் பொதுமக்களுக்கோ இடையூறு இல்லைதான். இருப்பினும் புறாக்கள் இடும் எச்சத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் புறாக்கள் வருவதை தடுக்க, மாநகராட்சி முகப்பு மற்றும் புறாக்கள் அடையும் பகுதிகள் முழுவதும் கணக்கிடப்பட்டு, வலைகள் அடிக்கப்படுகிறது. பல ஆயிரம் சதுர அடி கொண்ட பழமையான கட்டடம் முழுவதும் கருப்பு நிறம் கொண்ட மெல்லிய வலைகள் அடிக்கப்பட்டு புறா வருவது தடுக்கப்பட்டுள்ளது.

சிவசு

About Author

You may have missed

error: Content is protected !!