April 15, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நெற் பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கேப்டன் அறிக்கை

நெற் பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கேப்டன் அறிக்கை

கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அறுவடைக்கு தயாராக இருக்கும் விளை நிலங்களை அழித்து, அதனை கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இரவோடு இரவாக நெல் வயல்களுக்குள் பொக்லைன் இயந்திரங்களை இறக்கி, பயிர்களை அழித்து விட்டனர். இதை தடுக்க வந்த விவசாயிகள் யாரையும் அருகே போலீசார் விடவில்லை. சில பெண்கள் மண்ணை வாரி இறைத்து கண்ணீர் விட்டு அழுததையும் பார்க்க முடிந்தது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய தமிழக காவல்துறை, என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது. விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி நிர்வாகத்தின் செயலால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். விவசாயிகள் ஒப்புதலுடன் நிலங்களை கையகப்படுத்த வேண்டுமே தவிர, அடாவடித்தனமாக நிலங்களை கையகப்படுத்துவதை என்எல்சி நிர்வாகம் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை எதிர்த்து கொண்டு வரப்படும் எந்த திட்டங்களும் இறுதியில் தோல்வியில் முடிவடையும். விவசாயிகளுக்கு உறுதுணையாக இந்த அரசு இருக்கும் என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், நெற்பயிர்களை அழித்து அவசர அவசரமாக விரிவாக்கம் பணிகளை மேற்கொண்டு வரும் என்எல்சி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல். காவல்துறையை கொண்டு விவசாயிகளை அடக்க நினைப்பது ஆளுகின்ற அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை காட்டுகிறது. நெற்பயிர்களை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியை என்எல்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறினார். வாடிய பயிர்களை காணவே நம்மால் முடியாத நிலையில், தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை அழிப்பது என்பது விவசாயத்தை நிரந்தரமாக அழிப்பதற்கு சமம். எனவே, சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுடன் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி தேமுதிக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்எல்சி நிர்வாகத்தை என ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கு எச்சரிக்கிறேன். என்.எல்.சி. நிர்வாகம் உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.என தேமுதிக தலைவர் கேப்டன் விஜய்காந்த்  அறிக்கையில் குறிபிட்டுள்ளார்  

About Author

error: Content is protected !!