July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

2021‌‌ தேர்தலில் மாற்றம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி-பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்டார்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார் . அப்போது செய்தியாளர்கள் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர் அப்போது

“ரஜினிகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்திற்கும், எங்களது குடும்பத்திற்கு அவர்மேல் ஒரு மரியாதை உண்டு.

ரஜினிகாந்த் தன் அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார்.

கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார்.

வருகிற 2021‌‌ தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும் நிச்சயம் மாபெரும் ஒரு மாற்ற‌ம் தமிழக அரசியலில் நிகழப்போவது உறுதி என்பது எங்களது கருத்தும் கூட”எனத் தெரிவித்தார்

About Author

error: Content is protected !!