February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

பாலியல் வன்கொடுமை தூக்குத்தண்டனை நீதியரசருக்கு கேப்டன் நன்றி

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர்
கேப்டன் விஜயகாந்த் கோவை போக்சோ நீதிமன்ற நீதியரசருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
தூக்குத்தண்டனை தீர்ப்பை வரவேற்று அறிக்கைகோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கிய கோவை போக்சோ நீதிமன்றத்திற்கு தேமுதிக சார்பில் பாராட்டுக்களை தெரிவித்து இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். இனி வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களை செய்ய அஞ்சி வெட்கப்படக் கூடிய ஒரு சூழ்நிலையை இந்த தீர்ப்பு வழங்கியிருக்கிறது. பெண் பிள்ளைகளுக்கு இதுபோன்ற ஒரு நிகழ்வுகள் நடக்காத வண்ணம் ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர்களுக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

About Author

error: Content is protected !!